வியாழன், 27 ஆகஸ்ட், 2009

தமிழ் ஈழமா ? சுயாட்சிவுரிமையா ?

இலங்கை அரசின் சிங்கள பேரினவாதக் கொள்கை கைவிடப்பட வேண்டும். அரசு என்பது மக்களுக்கு பொதுவாக இருத்தல் வேண்டும்.எல்லாருடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டு்ம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு எல்லோர்க்கும் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக, இலங்கையின் பேரினவாதக் கொள்கை தான், இலங்கை தமிழர்களைப் போராட தள்ளியது. தனிஈழம் என்ற கோரிக்கையும் எழுந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும் தோன்றியது.தமிழ்நாட்டடில் தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கை எழுந்து கைவிடப்பட்டப் சூழலில் இலங்கையில் தமிழர்களிக்கு தமிழ் ஈழம் கோரப்பட்டது. விடுதலைப் புலிகள் அரசியல் இயக்கத்தைக் காட்டடிலும் இராணுவ இயக்கத்தை நம்பினார்கள், சகல தமிழ் சகோதர அமைப்புகளை அழித்தார்கள். கம்யூனிஸ்ட் இயக்கங்களை குறிவைத்துத் தாக்கினார்கள்.தனிஈழம் என்பது இலங்கை இராணுவத்திற்க்கும் விடுதலைப் புலிகளிக்கும் இடையே போராக மாறியது.இப்பொழுது போர் முடிந்துள்ளது, விடுதலைப் புலிகள் பின்னடவை அடைந்துள்ளார்கள்.தமிழர்களுக்குள் ஏழை, பண்காரன், தொழிலாளி முதலாளி, இந்து முஸ்லீம்,இந்துவில் பல்வேறு சாதிகள், தலித் தீண்டாமை என்று இவ்வளவு முரண்பாடுகள் இருக்கையில், அனைத்து இலங்கைத் தமிழ் மக்களை தமிழ் என்கிற ஓர் ஒற்றை குறியீட்டில் அடைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. முதலில் இலங்கைத் தமிழர்கள் குறைந்தபட்ச கருத்தொற்றுமைக்கு வர வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வு பெற முயற்சிக்க வேண்டும்.தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சுயாட்சிவுரிமையும், சிங்களவர்க்கு சமமான அதிகாரப்பகிர்வும் பெறுதல் வேண்டி அனைவரும் செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக