வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

பட்டியில் தமிழர்கள்


பட்டியல் ஆடுகளைப் போல் மின்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை, கன்னிவெடிகளை அகற்றுதல் என்கிற சாக்குக் காட்டாமல் இலங்கை அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பாராளுமன்றத்தில் பணநாயகம். சனநாயகம் தழைக்குமா?

15 வது மக்களவைக்கு தேர்தல் முடிந்து முற்போக்கு சனநாயக முன்னணி ஆட்சியில் அமர்ந்துள்ளது.பா.ச.க. வின் தோல்வி நாட்டின் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி. 3 வது அணியின் தோல்வி்க்கான காரணங்களை இன்னும் ஆராய வேணடியிருக்கிறது. 3 வது அணியை மக்கள் ஏற்க்கவில்லை.3 வது அணியில் இருந்த கட்சிகளுள் ஒற்றுமையில்லை. பா.ச.க. ஆட்சிக்கு வந்துவிடுமோ? என்ற அச்சம் சிறுபான்மையினரை காங்கிரசுக்கு ஆதரவாகத் தள்ளியிருக்கிறது.நமது நாட்டின் குடியரசு தலைவர் ஒரு பெண். மக்களவைத் தலைவர் ஒரு பெண். மிகவும் மகிழ்ச்சி.,,பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள்நடத்த வந்தோம்,, என்ற மகாகவி பாரதியின் கனவுகள் நனவாகுவதில் உள்ளம் பூரிப்பு கொள்கிறது.ம்ககளவைக்கு 58 பெண் உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். இது மக்களவை உறுப்பினர்களில் 10 சதம் தான். இது போதாது. 50 க்கு 50 வேண்டும். மீதமுள்ள 40 சதத்தை பெண்கள் பெற அனைவரும் பணியாற்ற வேண்டும். 33 சதவீத பெண்கள் இடஓதுக்கீடு மசோதா விரைவில் வெற்றி பெற நாம் உழைப்போம்.சில விபரங்களைப் பார்க்கிறப்பொழுது மிகவும் வருத்தமாகவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள், 150 பேர்கள் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள்.இதில் 42 பேர்கள் பா.ச.க. 41 பேர்கள் காங்கிரசு. 300 உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்.இதில் 138 காங்கிரசு. 58 பா.ச.க. அடங்குவர். குரங்குகள் கையில் பூமாலைகள் கொடுத்த கதையாக ஆகிவிடுமோ ? மிகவும் அச்சமாகவுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்

தமிழ் ஈழமா ? சுயாட்சிவுரிமையா ?

இலங்கை அரசின் சிங்கள பேரினவாதக் கொள்கை கைவிடப்பட வேண்டும். அரசு என்பது மக்களுக்கு பொதுவாக இருத்தல் வேண்டும்.எல்லாருடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டு்ம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு எல்லோர்க்கும் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக, இலங்கையின் பேரினவாதக் கொள்கை தான், இலங்கை தமிழர்களைப் போராட தள்ளியது. தனிஈழம் என்ற கோரிக்கையும் எழுந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும் தோன்றியது.தமிழ்நாட்டடில் தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கை எழுந்து கைவிடப்பட்டப் சூழலில் இலங்கையில் தமிழர்களிக்கு தமிழ் ஈழம் கோரப்பட்டது. விடுதலைப் புலிகள் அரசியல் இயக்கத்தைக் காட்டடிலும் இராணுவ இயக்கத்தை நம்பினார்கள், சகல தமிழ் சகோதர அமைப்புகளை அழித்தார்கள். கம்யூனிஸ்ட் இயக்கங்களை குறிவைத்துத் தாக்கினார்கள்.தனிஈழம் என்பது இலங்கை இராணுவத்திற்க்கும் விடுதலைப் புலிகளிக்கும் இடையே போராக மாறியது.இப்பொழுது போர் முடிந்துள்ளது, விடுதலைப் புலிகள் பின்னடவை அடைந்துள்ளார்கள்.தமிழர்களுக்குள் ஏழை, பண்காரன், தொழிலாளி முதலாளி, இந்து முஸ்லீம்,இந்துவில் பல்வேறு சாதிகள், தலித் தீண்டாமை என்று இவ்வளவு முரண்பாடுகள் இருக்கையில், அனைத்து இலங்கைத் தமிழ் மக்களை தமிழ் என்கிற ஓர் ஒற்றை குறியீட்டில் அடைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. முதலில் இலங்கைத் தமிழர்கள் குறைந்தபட்ச கருத்தொற்றுமைக்கு வர வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வு பெற முயற்சிக்க வேண்டும்.தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சுயாட்சிவுரிமையும், சிங்களவர்க்கு சமமான அதிகாரப்பகிர்வும் பெறுதல் வேண்டி அனைவரும் செயல்படுவோம்.

சனி, 22 ஆகஸ்ட், 2009

இலங்கைக்கு பன்னாட்டு செலாவணி நிதி

இலங்கையில் போர் முடிந்துள்ளது, இலங்கை அரசு மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணியினை அரம்பித்துள்ளது, வரவேற்கக்கிறோம். இப்பணியை அவசரவுணர்வோடு செய்ய வேண்டிய சூழலில் தமிழர் வாழ்நிலை இருக்கிறது. போதிய உணவு, மருத்துவ, இருப்பிட, கழிப்பிட வசதியில்லாமல், இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவதை நாகரிகச் சமுதாயம் அணுமதி்க்க முடியாது.
இலங்கையின் சீரமைப்பு மற்றும் மக்கள் மறுவாழ்வு பணிக்காக, பன்னாட்டு செலாவணி நிதியத்தின் 11200 கோடி ரூபாய் கடனுதிவிக்கு இலங்கை அணுகியது. அதை அமெரிக்கா, பிரி்ட்டன், மற்றும் பிரான்ஸ் எதிரித்தது.ஆனால்,சீனா உள்ள்ளிட்ட சொசலிச நாடுகள்,இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆதரவால் கடனுக்கு அனுமதி கிடைத்தது. இலங்கை அரசு தமிழர்களை இனரீதியாக ஒடுக்குகிறது, ஆகவே பன்னாட்டு செலாவணி நிதியம் இலங்கை அரசுக்கு கடன் தருவதை எதிர்க்கிறோம் என்கிறது அமெரிக்கா, அவர்கள் சொல்கிற சாக்கு சரியா ?. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய்களின் கடந்த கால செயல்களைச் சற்று கவனித்தால் நமக்கு பதில் கிடைக்கும்.இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அமைதி நிலவுவதை அமெரிக்க வல்லரசு விரும்பவில்லை.அமெரிக்கா உலகத்தின் ஆயுத வியாபாரி. போர் நடந்தால் தானே தன்னுடைய ஆயுதங்களை பிற நாடுகளுக்கு விற்று காசு கொழிக்க முடியும். அமெரிக்காவின் அடாவடிதனத்தை நாம் ஈராக்கில் பார்த்தோம்.பசுத்தோல் போர்த்தி வந்தாலும் அமெரிக்கா ஒரு கடித்துக்கொதரும் புலி என்பது தெளிவாகிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இலங்கைத் தமிழர் வாழ்வு

கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்த போர் முடிந்துள்ள நிலையில் வன்னிப் பகுதியில் மூன்று இலட்சம் தமிழர்கள் மின் முள்வேளிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். தாய் மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது நெஞ்சத்தை கணக்க வைக்கிறது.இலங்கை அரசு காலத் தாமதம் செய்யாமல் அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.அனைத்துவிதமான மறுவாழ்வு பணிகள் உடனடியாக தொடங்கி,தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை வர வேண்டும்.அதற்க்கு மத்திய மாநில அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்