திங்கள், 13 டிசம்பர், 2010

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம்


டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை திரைப்படமாக 1998 ல் தாயாரிக்கப்பட்டு, 2000 இல் வெளியானது. அதன் தமிழ் வடிவம் 2010 இல் தான் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் நுழைந்திருக்கிறது. ஆக, அம்பேத்கர் திரைப்படத்தினை தமிழில் பெற பத்து ஆண்டுகள் தாமதம் ஆகியிருக்கிறது.
அம்பேத்கராக பிரபல நடிகர் மம்முட்டியும், அம்பேத்கர் மனைவியாக சோனாலி குல்கர்னியும்,மகாத்மா காந்தியாக மோகன் கோகுலேவும் நடித்துள்ளனர். 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கமும்,தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும் இணைந்து அம்பேத்கர் திரைப்படத்தைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.தலித் மற்றும் பிற்கப்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அயராது உழைத்து, தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர்.நாம் அனைவரும் குடும்பத்துடன் இத்திரைப்படத்தினை காண்போம்.
அம்பேத்கரை திரையிடுவோம்.தீண்டாமைக்கு தீயிடுவோம்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தள்ளிப் போடாமல் மசோத நிறைவேற்றப்பட வேண்டும். "ஆணுக்கு நிகரென பெண்" - என்ற பாரதியின் கனவு நனவாக வேண்டும். தனி நபர் சட்ட மசோத ஒன்றும் கடந்த வாரம் மாநிலங்கலவையில் நிறைவேறியது. இதன்படி, பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம் 1890 மற்றும் இந்து சமயத்தில் தத்து எடுத்தல் மற்றும் நிர்வாகித்தல் சட்டம் 1956 திருத்தம் பெருகிறது. இதன்பிரகாரம், தாயும் தன் குழந்தைகளுக்கு பாதுகாவலராக நியமனம் பெறலாம் என்கிற அடிப்படை மனித உரிமையைப் பெண் பெறுகிறார். மற்றும் ஆண் , பெண் குழந்தைகளை ஒரு பெண் தத்து எடுக்கவும் உரிமை பெறுகிறார் என்பதை நினைக்கையில் மனம் ஆனந்தம் கொள்கிறது. இதனால், பாலின பேதத்தின் சதவீதம் கொஞ்சம் குறையலாம். "குழந்தைகளுக்கு கார்டியன் பாத்தியம், ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளல் இவைகளில் ஆண், பெண் இருவருக்கும் முழுச் சம உருமை இருக்க வேண்டும் என்கிற தீர்மானம் 1930 ல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் நிறைவேறியதை மறக்க முடியாது, கால மகள் கைகளில் இன்னும் எத்தனையோ இருக்கிறது, விரைந்து செயல்படுத்து, தாயே.

புதன், 11 ஆகஸ்ட், 2010

கல்லால் அடிக்காதே


கல்லால் அடிக்காதே
பாவம் ஒரு தவறும் செய்யாமல்
அந்தக் கல் உடைகிறது.