ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தள்ளிப் போடாமல் மசோத நிறைவேற்றப்பட வேண்டும். "ஆணுக்கு நிகரென பெண்" - என்ற பாரதியின் கனவு நனவாக வேண்டும். தனி நபர் சட்ட மசோத ஒன்றும் கடந்த வாரம் மாநிலங்கலவையில் நிறைவேறியது. இதன்படி, பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம் 1890 மற்றும் இந்து சமயத்தில் தத்து எடுத்தல் மற்றும் நிர்வாகித்தல் சட்டம் 1956 திருத்தம் பெருகிறது. இதன்பிரகாரம், தாயும் தன் குழந்தைகளுக்கு பாதுகாவலராக நியமனம் பெறலாம் என்கிற அடிப்படை மனித உரிமையைப் பெண் பெறுகிறார். மற்றும் ஆண் , பெண் குழந்தைகளை ஒரு பெண் தத்து எடுக்கவும் உரிமை பெறுகிறார் என்பதை நினைக்கையில் மனம் ஆனந்தம் கொள்கிறது. இதனால், பாலின பேதத்தின் சதவீதம் கொஞ்சம் குறையலாம். "குழந்தைகளுக்கு கார்டியன் பாத்தியம், ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளல் இவைகளில் ஆண், பெண் இருவருக்கும் முழுச் சம உருமை இருக்க வேண்டும் என்கிற தீர்மானம் 1930 ல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் நிறைவேறியதை மறக்க முடியாது, கால மகள் கைகளில் இன்னும் எத்தனையோ இருக்கிறது, விரைந்து செயல்படுத்து, தாயே.

1 கருத்து:

  1. ஒவ்வொரும் நாளும்
    மாலை நான்கு மணிக்கு
    ஆரம்பிக்கும் ஆலோசனை
    அப்படி தினமும்
    என்ன தான் பேசிக்கொள்வார்கள்
    அம்மாவும் அப்பாவும்
    குழந்தைக்கு ஒன்றும்
    விளங்காத புதிர்
    அடர்மழை காலங்களில்
    தொடர் வேலைக் கிடைப்பது
    கடினம் என்பது
    விளையாட்டு பருவத்தில்
    விளங்கவில்லை
    குழந்தைக்கு ஆளானபொழுதுதான்
    அப்பா அம்மாவின்
    நான்கு மணிக்கு ஆலோசனை
    எதைப்பற்றி என்பது
    சோத்துக்கு வழியில்லை
    ராத்திரிப் பொழுதை
    எப்படிக் கடப்பது

    பதிலளிநீக்கு