திங்கள், 13 டிசம்பர், 2010

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம்


டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை திரைப்படமாக 1998 ல் தாயாரிக்கப்பட்டு, 2000 இல் வெளியானது. அதன் தமிழ் வடிவம் 2010 இல் தான் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் நுழைந்திருக்கிறது. ஆக, அம்பேத்கர் திரைப்படத்தினை தமிழில் பெற பத்து ஆண்டுகள் தாமதம் ஆகியிருக்கிறது.
அம்பேத்கராக பிரபல நடிகர் மம்முட்டியும், அம்பேத்கர் மனைவியாக சோனாலி குல்கர்னியும்,மகாத்மா காந்தியாக மோகன் கோகுலேவும் நடித்துள்ளனர். 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கமும்,தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும் இணைந்து அம்பேத்கர் திரைப்படத்தைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.தலித் மற்றும் பிற்கப்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அயராது உழைத்து, தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர்.நாம் அனைவரும் குடும்பத்துடன் இத்திரைப்படத்தினை காண்போம்.
அம்பேத்கரை திரையிடுவோம்.தீண்டாமைக்கு தீயிடுவோம்.

1 கருத்து:

  1. வீடு
    --------
    தினமும் தண்ணீர்
    ஊற்றி வளர்த்த
    மரத்தின் கிளையில்
    காகம் உட்கார்ந்து கரையும் பொழுதில்
    அணில் அணிலோடு
    ஓடிவிளையாடும் அழகினை
    கண்டு ரசிக்கையில்
    சிட்டுகள் கூடுகட்டி
    குஞ்கு வளர்க்கையில்
    மரம் வளர்த்தவன்
    மரத்தடியில் படுத்து
    கனவு கண்டான்
    அவனுக்கு ஒரு வீடு கட்ட.

    பதிலளிநீக்கு